News April 2, 2025
புதுச்சேரியில் 15 மதுக்கடைகளுக்கு சீல்

புதுச்சேரியில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு கலால்துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக்கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.
Similar News
News April 3, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுவை சைபர் கிரைம் சீனியர் எஸ்பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தெரியாத நபர்களிடமிருந்து whatsapp/Instagram/Facebook மூலம் ஏதேனும் செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம். போலியான உடனடி கடன் செயலிகளை நம்ப வேண்டாம். மும்பை காவல்துறை, CBI மற்றும் TRAI அதிகாரிகள் போன்ற அழைப்புகள் வந்தால், அதனை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 3, 2025
துற்சக்திகளை நீக்கும் அம்பை காளி

காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் இந்த காளி கோயில் உள்ளது. புதுச்சேரியில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானதாகவும், வட இந்தியாவுக்கு அடுத்த இரண்டாவது காளி தலமாக விளங்குகின்றது. அரக்கனை கொன்ற காளிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட இங்கு அதிலிருந்து நிவர்த்தி பெற்றார். வழக்கு பிரச்சனைகள் உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் அனைத்தும் இங்கே வந்தால் தொலைந்து போகும் என்று கூறப்படுகின்றது.
News April 3, 2025
புதுவையில் மறுத் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் CBSC பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டில் 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த புதுச்சேரி கல்வித்துறை உத்திரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலும் மறுதேர்வு நடைபெறும்.