News April 2, 2025
கஞ்சா, கள், சாராயம் விற்ற பெண்கள் உட்பட 63 பேர் கைது

அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில் அரூர் கோட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்கள் கடந்த மாதம் நடத்திய சோதனையில், மதுபானம் விற்பனை செய்து 7 பெண்கள் உட்பட 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 661 மது பாட்டில்கள், 324 லிட்டர் கள், 2 கிலோ கஞ்சா, 32 லிட்டர் சாராயம் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நேற்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 15, 2026
இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (ஜன-15) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சதீஸ் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சேகர் ,தோப்பூரில் வேலண் , மதிகோன்பாளையத்தில் மகாலிங்கம் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News January 15, 2026
தருமபுரி:பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
News January 15, 2026
தருமபுரி:10th போதும்.. மத்திய அரசு வேலை ரெடி!

1. RBI-ல் Office Attendant பிரிவில் 572 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதற்கு 10th முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.47,029 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள்<
5. விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.04. சூப்பர் வாய்ப்பு. மிஸ் பண்ண வேண்டாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.


