News April 2, 2025

மது கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்- எஸ்.பி எச்சரிக்கை

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்தாய்வு கூட்டம் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்துவோர் மற்றும் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றச் செயலில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு காவலில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

Similar News

News March 19, 2026

கடலூர்: ஆன்லைன் மின் கட்டண சேவை நிறுத்தம்

image

கடலூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கணினி சர்வர் மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே மின்வாரிய அலுவலகங்கள் மற்றும் கணினி வசூல் மையங்களில் நாளை மறுநாள் (21.3.2026) காலை 6 மணி முதல் 22-ந் தேதி இரவு 12 மணி வரை ஆன்லைன் மின்கட்டண சேவை செலுத்த இயலாது என, கடலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சரவண துரைமோகன் தெரிவித்துள்ளார்.

News March 19, 2026

இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.92 லட்சம் இழப்பீடு

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியராக பணிபுரிந்தவர் பாபு. இவர் கடந்த 2018 ம் ஆண்டு தில்லைநாயகபுரம் பகுதியில் ஆட்டோவில் செல்லும்போது பள்ளி பேருந்து மோதி உயிரிழந்தார். இந்நிலையில், அவருடைய மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு, கடலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் வட்டி, செலவு தொகையுடன் சேர்த்து ரூ.92,07,954 வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2026

கடலூர்: அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

image

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், 2026- சட்ட மன்ற தேர்தல் பணி குறித்து நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான சி.வே.கணேசன் தலைமையில் ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்களுடன் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!