News April 2, 2025

பாஜக தேசிய தலைவர் யார்?

image

பாஜகவின் புதிய தேசிய தலைவர் பற்றிய அறிவிப்பு இம்மாதம் 3ஆவது வாரம் வெளியாகும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 4ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்களுக்கான புதிய தலைவர் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 2019ல் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டாவின் பதவிகாலம், 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு நீட்டிக்கப்பட்டது.

Similar News

News March 18, 2026

வரலாற்றில் இன்று

image

➤1662 – உலகின் முதல் பேருந்து சேவை பிரான்ஸில் தொடங்கியது. ➤1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி 6 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். ➤1965 – சோவியத் வீரர் அலெக்சி லியோனொவ், விண்வெளியில் நடந்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். ➤ 1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.

News March 18, 2026

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

image

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக மழை பெய்வதையும் பார்க்கப்படுகிறது. அதன்படி இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதேபோல் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றூம் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News March 18, 2026

நடிகைகளுக்கு குடும்பம் இருக்கும்: இயக்குநர் அமீர்

image

நடிகை நயன் தாரா குறித்து <<19407643>>C.V. சண்முகம் <<>>பேசியது சர்ச்சையான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கும் என்பதை மறந்துவிட்டு அரசியல் மேடைகளில் அவர்களைப் பற்றி தவறாக பேச வேண்டாம் எனவும், நாகரிக அரசியலை பழகுங்கள் அரசியல்வாதிகளே எனவும் இயக்குநர் அமீர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!