News April 2, 2025
திருச்சியில் செய்தியாளர்களுக்கு அழைப்பு

சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை (02.04.2025) காலை 8:45மணியளவில், திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சுப்பிரமணிய அய்யரின் நினைவில்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு கலெக்டர் மா.பிரதீப் குமார் மாலை அணிவித்து மலர் தூவி அரசின் சார்பில் மரியாதை செய்ய உள்ளார். இதில் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 13, 2025
திருச்சி: அஞ்சல் ஊழியரிடம் தவறாக நடந்த காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி, பொன்மலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 25 வயது பெண் ஊழியர் 08.08.25 அன்று டூவீலரில் வேலைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணனை (32) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News August 13, 2025
திருச்சி எம்.எல்.ஏ இனிகோ முதல்வருக்கு கடிதம்

திருச்சி எம்எல்ஏ இனிகோ, தமிழக முதலமைச்சருக்கு இன்று கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நாடு முழுவதும் கல்லறை திருநாள் வரும் நவ-2ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நவ.1, 2 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் தகுதி தேர்வான TNTED தேர்வு நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆகவே கல்லறை திருநாளை முன்னிட்டு இந்த தேர்வு தேதியை மாற்றி அமைத்து தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
திருச்சி: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <