News April 2, 2025
தியேட்டரில் IPL போட்டிகள்?

நடப்பு ஐபிஎல் தொடரை திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கேட்டிருக்கிறார் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் திரைப்படங்கள் மட்டுமே ஒளிபரப்ப அனுமதி உண்டு. கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை ஒளிபரப்பினால் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டும். உங்களுக்கு தியேட்டரில் IPL பார்க்க விருப்பமா?
Similar News
News April 4, 2025
நடிகை ஷிவானிக்கு முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி?

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி, சில படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் வெளியான அவரின் புகைப்படத்தில் முகம் வெகுவாக மாறியிருந்தது. இதனால் அவர் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக தகவல் வெளியாகியது. இதை மறுத்த ஷிவானி, ஒரு வருடமாக ஹெல்தி டயட் மற்றும் உடற்பயிற்சி செய்வதாகவும், அதனால் முகம் மாறியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அவர் சொல்வது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே பதிவிடுங்க.
News April 3, 2025
வஃக்பு: மாநிலங்களவையில் பாஜக கூட்டணி பலம் என்ன?

வஃக்பு வாரிய திருத்த மசோதா, மக்களவையை அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மசோதாவை நிறைவேற்ற 125 MP-க்கள் பலம் பாஜக கூட்டணிக்கு உள்ளது. இதில் பாஜக 98, ஜேடியூ 4, என்சிபி 3, டிடிபி 2, நியமன MP-க்கள் 6 பேர் அடங்குவர். எதிர்க்கட்சிகளுக்கு 88 MP-க்கள் உள்ளனர். இதில் காங்கிரஸ் 27, திரிணாமுல் 13 MP-க்கள் அடங்குவர். பிஜேடியின் 7 MP-க்கள் ஆதரவு கிடைத்தால் பலம் கூடும்.
News April 3, 2025
ரூ.13,800 கோடி கணக்கில் வராத சொத்து வெளிவந்தது

பனாமா பேப்பர்ஸ் கசிவு எதிரொலியாக இந்தியாவில் கணக்கில் வராத ரூ.13,800 கோடி மதிப்பு சொத்துகள் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016இல் புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பால் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கணக்கில் காட்டாது மறைத்த சொத்துகள் வெளியிடப்பட்டன. இந்தியாவில் இதன் எதிரொலியாக பல ஆயிரம் கோடி சொத்துகள் வெளிவந்து ரூ.145 கோடி வரி வசூலிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.