News April 1, 2025

திண்டுக்கல் வழியாக ரயிலில் தொடரும் கஞ்சா கடத்தல்

image

மேற்கு வங்காளத்திலிருந்து திண்டுக்கல் வழியாக திருநெல்வேலி வரும் புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 50 கிலோ குட்கா கடத்தியதாக 2 பேர், வெளி மாநில மது பாட்டில்கள் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். புரலியா எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சோதனைகளை பலப்படுத்த காவல்துறை முடிவெடுத்துள்ளது. 

Similar News

News November 6, 2025

திண்டுக்கல்லில் இன்று முகாம் நடைபெறும் இடங்கள்!

image

உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (நவம்பர் 6) நடைபெற உள்ள இடங்கள்: திண்டுக்கல் மாநகராட்சி – நாகல்நகர், சௌராஷ்டிரா சபை நூற்றாண்டு விழா மண்டபம்; ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி பிளோரிஷிங் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளி; பழனி – வடக்கு தாதநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம்; நத்தம் – பரளிப்புதூர் அழகாபுரி மந்தை திடல்; ரெட்டியார்சத்திரம் – தர்மத்துப்பட்டி எம்.ஆர் திருமண மண்டபம்.

News November 6, 2025

திண்டுக்கல்: வேளாண் குறை தீர்க்கும் கூட்டம்

image

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் வருவாய் கோட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 10.11.2025 அன்று முற்பகல் 11.00 மணி முதல் 12.00 மணி வரை வேளாண் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைகளை முன்வைத்து தீர்வு பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது.

News November 5, 2025

திண்டுக்கல்: வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையின் அறிவுரை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் இன்று (நவம்பர் 5) சமூக வலைத்தளங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரையாக, வாகனக் கதவை திறப்பதற்கு முன்னர் பின்னால் வேகமாக வரும் வாகனங்களை கவனிக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதனால் சாலை பாதுகாப்பு மேம்பட்டு, சாலை விபத்துகள் குறைவடையும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!