News April 1, 2025
வெயில் காலத்தில்… இதை ஃபாலோ பண்ணுங்க!

*காலையில் எழுந்ததும் சிறிதளவு இளநீரை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பொலிவாகும். *வெயில் காலத்தில் முகத்தை அதிக முறைகள் சோப்பு போட்டு கழுவக்கூடாது. *லிப்ஸ்டிக், ஐ ஷேடோ போன்றவை வெளிர் நிறங்களில் இருப்பது மிக நல்லதாகும். *வெள்ளரிச்சாறுடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் தேய்த்து ஊறிய பின் கழுவி வர முகச்சுருக்கம் நீங்கும் *அடிக்கடி பழச்சாறு அருந்தலாம்.
Similar News
News April 3, 2025
என்ன பண்ண போறீங்க.. மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

USAவின் கூடுதல் வரி விதிப்பு விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், இந்திய நிலத்தை திரும்ப தரும்படி மோடியும், குடியரசுத் தலைவரும் சீனாவுக்கு கடிதம் எழுதியது குறித்து சீன தூதர் தெரிவித்ததை வைத்தே விஷயம் தங்களுக்கு தெரிய வந்திருப்பதாக விமர்சித்தார். இந்திய நிலத்தை திரும்ப பெற அரசு என்ன செய்ய போகிறது எனவும் வினவினார்.
News April 3, 2025
பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!

பள்ளி ஆண்டு விழாக்களில் சாதி ரீதியான அடையாளங்கள் இடம்பெறக் கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதிய அடையாளங்களுடன் பள்ளியில் நிகழ்ச்சி நடந்ததை சுட்டிக்காட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News April 3, 2025
நாடு பிடிப்பதில் இந்தியாவுக்கு நம்பிக்கையில்லை: மோடி

வளர்ச்சி மீதே இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது, நாடு பிடிப்பதில் நம்பிக்கை வைக்கவில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். தாய்லாந்து பிரதமர் சினவத்ராவுடன் பேச்சு நடத்தியபின் அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய மோடி, கலாச்சாரம், ஆன்மீக ரீதியில் இந்தியா, தாய்லாந்து நாடுகள் இடையே பல நூறாண்டு நல்லுறவு நிலவுவதாகவும், பெளத்த மதம் 2 நாட்டு மக்களையும் ஒன்றாக இணைத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.