News April 1, 2025
குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம்

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டு வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர், பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
News September 18, 2025
தாத்தா இரட்டைமலை சீனிவாசன்; திருவள்ளூர் எம்.பி பதிவு

திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காக தனி அமைப்பை நிறுவி தீண்டாமை ஒழிப்பு, கோயில் நுழைவு, நில உரிமை, கல்விக்கு நிதி ஒதுக்கீடு போன்றவற்றுக்காக போராடியவர். தமிழக மக்களால் தாத்தா என அன்போடு அழைக்கப்பட்ட இரட்டைமலை சீனிவாசன் பற்றி தனது பதிவு மூலம் நினைவுகூர்ந்தார்.
News September 18, 2025
திருவள்ளூர்: வேலை தேடுபவர்களுக்கு குட்நீயூஸ்

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில், நாளை 19ம் தேதி 25-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.