News April 1, 2025
திருப்பூரில் கனமழை அறிவிப்பு!

திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 4, 5 ஆகிய தேதிகளில், மாவட்டத்தில் சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
Similar News
News October 30, 2025
திருப்பூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 30, 2025
திருப்பூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் அலுவலக வளாகம் அறை எண் 439-ல் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவரங்களுக்கு 94990-55944 அழைக்கவும். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 30, 2025
திருப்பூரில் மாவட்ட சாம்பியன்ஷிப் கபடி போட்டி!

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் பொருளாளரும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் வருகிற 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் மாவட்ட அளவில் ஜூனியர் பிரிவு மாணவர்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் மாவட்ட கபடிக் கழக அலுவலக மைதானத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.


