News April 1, 2025
சிஎஸ்கே ஜெயிக்க இதை பண்ணணும்: சீக்கா டிப்ஸ்!

நடப்பு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கிய சிஎஸ்கே, அடுத்த 2 போட்டிகளில் பரிதாபமாக தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், ஜேமி ஓவர்டனுக்கு பதிலாக அணியில் கான்வே இடம் பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் குறிப்பிட்டுள்ளார். பவர்பிளே ஓவர்களில் அஸ்வின் பந்துவீசுவதை தவிர்க்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். சீக்கா டிப்ஸ் பலன் அளிக்குமா?
Similar News
News April 11, 2025
பிரபல தொழிலதிபர் மதுர் பஜாஜ் காலமானார்

நாட்டின் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான மதுர் பஜாஜ் (73) காலமானார். பஜாஜ் குழுமத்தின் நிறுவனரான ஜமன்லால் பஜாஜின் பேரனான இவர், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வைஸ் சேர்மனாக இருந்தார். மேலும், பஜாஜ் எலக்ட்ரிகல்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிற பஜாஜ் நிறுவனங்களின் தலைமை பொறுப்பிலும் இருந்துள்ளார். இவரின் மறைவுக்கு மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
News April 11, 2025
அதிமுக டூ பாஜக.. யார் இந்த நயினார் நாகேந்திரன்?

தென் தமிழகத்தின் அரசியல் முகங்களில் முக்கியமானவர் இந்த நயினார் நாகேந்திரன். குறிப்பாக நெல்லை மண்ணின் மைந்தர் என்ற அடைமொழியை பெற்றவர். அதனாலயே 5 முறை நெல்லை தொகுதியில் களம் கண்டு 3 முறை வெற்றியையும் பெற்றார். அதிமுகவில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் மின்சாரம், போக்குவரத்து என முக்கியத் துறைகளின் அமைச்சராக (2002 – 2006) இருந்தவர். 2017-ல் பாஜகவுக்கு தாவி தற்போது தலைமை பொறுப்பை நெருங்கியுள்ளார்.
News April 11, 2025
தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது: அமித் ஷா

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது? என்று அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ், தமிழ் என்று திமுக பேசுகிறது என்றும், ஆனால் அதன் வளர்ச்சிக்காக இதுவரை அக்கட்சி எதுவும் செய்யவில்லை என்றும் அவர் சாடினார். மருத்துவ படிப்புகளை தமிழில் கொண்டு வர வேண்டுமென முதல்வர் ஸ்டாலினிடம் பலமுறை தாம் வலியுறுத்தியதாகவும், ஆனால் ஸ்டாலின் அதற்காக எதுவும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.