News April 1, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
Similar News
News April 3, 2025
சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (1/2)

உ.பி. சம்பலில் சிக்கிய போலி மாந்திரீகர்களிடம் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளே அவர்களது குறி. உங்கள் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு மாந்திரீக பூஜை செய்தால் பணம் கொட்டும் என பெற்றோரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் அத்துமீறியுள்ளது. தனியறையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பை வணங்கி பூஜை நடக்குமாம். அதன்பிறகு அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
News April 3, 2025
சிறுமிகளின் பிறப்புறுப்புக்கு பூஜை… ஷாக்கிங் வீடியோ (2/2)

தன்வர்ஷா என அழைக்கப்படும் அந்த கும்பலிடம் இருந்து இதுவரை 200 சிறுமிகளின் அந்தரங்க வீடியோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளார்களா என போலீஸ் விசாரித்து வருகிறது. பணத்தாசையால் தங்கள் வீட்டு பெண்களின் வாழ்க்கையை பெற்றோரே சீரழித்தது கொடுமையிலும் கொடுமை.
News April 3, 2025
குற்றவாளிகளுக்கு அடைக்கலம்.. சட்டம் சொல்வது என்ன?

திட்டமிட்டு குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். இதை செய்யும் நபர்களுக்கு என்ன தண்டனை அளிக்கப்படும் என்பது குறித்து பிஎன்எஸ் சட்ட 111(5)ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும் என்றும், அதேபோல் குறைந்தது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.