News April 1, 2025

கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

image

மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ், நவலிங்கம் ஆகிய மூவரும் சனிக்கிழமை மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது.

Similar News

News December 13, 2025

நாகை: டெண்டர் முறைக்கேடு – அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு

image

நாகை மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ள கடைகளுக்காக ரூ.30.40 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், கடைகள் கட்டுமான பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், டெண்டர் அறிவிக்கப்பட்டது முறைகேடு என அதிமுக நகரச் செயலாளர் தங்கக் கதிரவன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் விளக்கம் அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 13, 2025

நாகை மக்களே உடனடி தீர்வு வேண்டுமா?

image

நாகை மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்கள் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart<<>> என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 13, 2025

நாகை: 101 வயதான சமூக சேவகரை பாராட்டிய CM

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கூத்தூர் உழவனின் நில உரிமை இயக்க செயலாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். 101 வயதான இவரின் சமுக சேவை பாராட்டி மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ, பத்ம விபூசன் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை விரிவாக்க திட்ட விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணம்மாள் ஜெகநாதனை பாராட்டி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!