News April 1, 2025
ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் அவகாசம் தெரியுமா?

ரயிலில் உடனடி டிக்கெட், முன்பதிவு டிக்கெட், தட்கல் டிக்கெட் என பல டிக்கெட்டுகள் உள்ளன. இதில் பயணத் தேதியை திட்டமிட்டு முன்கூட்டி டிக்கெட்டை முன்பதிவு செய்ய ரயில்வே வசதி அமலில் உள்ளது. இந்த டிக்கெட்டை இந்தியர்கள் எனில் பயணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு இணையதளத்திலோ, டிக்கெட் கவுண்டர் மூலமோ முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டினர் எனில் 365 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம்.
Similar News
News March 17, 2026
FLASH: தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்

உச்சத்தில் இருந்த தங்கம் விலை, ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தலைகீழ் மாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹3,200 குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ₹35,000 வரை குறையும் என <<19401126>>ஜெயந்திலால் சலானியும்<<>> தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மாற்றம் உடனே நிகழ வாய்ப்பில்லையாம். படிப்படியாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
News March 17, 2026
ஒரு மூலையில் மட்டும் ஏன் SIM கார்டு வெட்டப்பட்டுள்ளது?

சிம் கார்டின் இந்த வடிவத்திற்கு பின்னால், ஒரு காரணம் உள்ளது. தொடக்கத்தில் சிம் கார்டுகள் செவ்வக வடிவிலேயே இருந்தன. அப்போது போனில் சிம் கார்டை எப்படி சொருகுவது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாற்றி சொருகுவதால், சிம் கார்டு சேதமடைய வாய்ப்பு இருந்ததுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்கவே, ஒரு மூலையில் மட்டும் வெட்டி, போனில் உள்ள சிம் கார்டு Slot-ஐயும் அதற்கேற்ப வடிவமைத்துள்ளனர். SHARE IT.
News March 17, 2026
நயன்தாரா சர்ச்சை: நடிகர் சங்கம் கண்டனம்!

நடிகைகளை தரக்குறைவாக பேசுவது நாகரிகமான அரசியல் ஆகாது என தென்னிந்திய நடிகர் சங்கம் <<19406314>>சிவி சண்முகத்துக்கு<<>> கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், அரசியல் மேடைகளில் மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க பெண்களையும், நடிகைகளையும் அநாகரிகமாகச் சித்தரிப்பதுதான் உங்கள் கொள்கையா எனவும் கடுமையாக விமர்சித்துள்ளது. முன்னதாக, தனது கருத்துக்கு சிவி சண்முகம் வருத்தம் தெரிவித்திருந்தார்.


