News April 1, 2025
தவெகவில் இருந்து விலகும் தாடி பாலாஜி?

தவெகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகர் தாடி பாலாஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, அவர் கட்சியில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய்யுடன் இருப்பவர்கள் தன்னை வேண்டுமென்றே தவிர்ப்பதாகவும், விஜய்யை நெருங்க கூட விடுவதில்லை என்றும் அவர் காட்டமாக பேசியுள்ளார். முன்னதாக, விஜய்யின் படத்தை அவர் நெஞ்சில் பச்சை குத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 4, 2025
BREAKING: அண்ணா பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள இணைப்பு கல்லூரிகளுக்கான அரியர் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியாகியிருக்கின்றன. மாணவர்கள் <
News April 4, 2025
மும்பை அணிக்கு இமாலய இலக்கு…!

MI அணிக்கு 204 ரன்களை இலக்காக LSG நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று MI பந்துவீச்சை தேர்வு செய்ததால், முதலில் LSG பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டியதால் அந்த அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. மார்ஷ் (60), மார்க்ரம் (53) அரைசதம் விளாசி அசத்தினர். கேப்டன் ரிஷப் பண்ட்(2) வழக்கம்போல் ஏமாற்றம் அளித்தார். MI தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். எந்த அணி வெல்லும்?
News April 4, 2025
வக்ஃப் மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

வக்ஃப் மசோதாவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வக்ஃப் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் எம்.பி. முகமது ஜாவேத்தும், AIMIM தலைவர் அசாதுதீன் ஓவைசியும் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மசோதா உள்ளதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.