News April 1, 2025
கோடையில் கால்நடைகளை பாதுகாக்க ஆட்சியர் அறிவுரை

கோடை காலத்தையொட்டி கால்நடைகள் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று (ஏப்.01) வெளியிட்டுள்ள செய்தியில்; கால்நடைகளை கால்நடை வளர்ப்போர் நிழல் தரும் கூரையின் அடியிலோ அல்லது மர நிழலிலோ கட்ட வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும். கால்நடை தீவனங்களை வெட்டி வெளியில் போடக்கூடாது.முற்றிலும் அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 26, 2025
குமரி: வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

முட்டத்திலிருந்து கடந்த 19ஆம் தேதி 23 பேர் ஒரு படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.49 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மேற்கு வங்கத்தை சேர்ந்த தாகூர் தாஸ் என்பவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News October 26, 2025
குமரி: இன்ஸ்பெக்டர் லஞ்சம்; 4 காவலர்கள் மீது நடவடிக்கை

நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளர் அன்பு பிரகாஷ் 1.15 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஸ்டாலின் இன்று உத்தரவிட்டு உள்ளார்.
News October 26, 2025
குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்.ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள் நெல்லை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். னேலும் 5 பேர் மற்ற காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


