News April 1, 2025
பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
ராமநாதபுரம் சைபர் காவல்துறை எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் புதிய எச்சரிக்கையுடன் விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களின் பெயரால் பொய் ஸ்காலர்ஷிப் என்று சொல்லி, QR code, வங்கி கணக்கு, OTP கேட்டு பணம் மோசடி செய்பவர்கள் மீது பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 1930 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
News August 9, 2025
ராமநாதபுரம் இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரம்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை, சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கமுதி, பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர் உட்கோட்டத்தில் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு, பொதுமக்கள் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெறலாம்.
News August 8, 2025
ராம்நாடு: 12th படித்தால் ரூ.15,000 சம்பளம்!

ராமநாதபுரத்தில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி பணிக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். <