News April 2, 2024

குளிர்பான விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடைகாலம் துவங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையோரம் விற்கப்படும் பழச்சாறுகள் மற்றும் குளிர்பானங்களை அருந்தி வருகின்றனர். இவ்வாறு விற்கப்படும் குளிர்பானங்கள் தரமானதாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுகுறித்த புகார்களுக்கு 94440 42322 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News November 18, 2025

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவி தேர்வு

image

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேசிய வில்வித்தை போட்டிக்கான வீரர்கள் தேர்வு போட்டியில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குயிக் ஸ்பேரோ வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி தவ்ஷிகா தஸ்னீம்(14) பெண் பதக்கம் வென்றார். இதனைத் தொடர்ந்து இவர் டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற உள்ள 21 வயதிற்கு உட்பட்ட இந்திய ஜூனியர் வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News November 18, 2025

திருவள்ளூருக்கு பெருமை சேர்த்த பாலபுரம் ஊராட்சி

image

மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் சார்பில் புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 6வது தேசிய நீர் மேலாண்மை விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலாபுரம் ஊராட்சிக்கு தேசிய அளவில் நீர் மேலாண்மையில் 3வது இடம் கிடைத்தது. இதற்கான விருதை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில் திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் வழங்கினார்.

News November 18, 2025

திருவள்ளூர்: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

image

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <>இங்கு <<>>க்ளிக் செய்து உடனே APPLY பண்ணுங்க. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!