News April 1, 2025
அங்கன்வாடி ஆசிரியராக இலவச பயிற்சி!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் இலவசமாக, அங்கன்வாடி ஆசிரியர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதிற்கு அதிகமான பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியின் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு தொடக்கமே மாதம் ரூ.7,500 முதல் ரூ.20,000 வரை சம்பளம் கிடைக்கும். மேலும் விவரங்களை <
Similar News
News October 24, 2025
புதுக்கோட்டை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

புதுகை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04322-220585) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
புதுகை: மனைவியின் சகோதரரை கொலை செய்த கணவன்

கந்தர்வகோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் (45) என்பவர் தஞ்சை, கபிஸ்தலம் அருகே செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய அக்கா ராணி குடும்ப பிரச்சனை காரணமாக கணவர் சின்னதம்பியை பிரிந்து நடராஜனுடன் வசித்து வந்துள்ளார். ராணியை மீண்டும் சேர்ந்து வாழ சின்னதம்பி அழைத்தபோது, நடராஜன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சின்னத்தம்பி, நடராஜனை துண்டினால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
News October 24, 2025
ஆலங்குடியில் பள்ளத்தில் சாய்ந்த பள்ளி வாகனம்

ஆலங்குடியில் ஆங்காங்கே சாலையின் அருகே பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் நடைபெற்றுக் வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.23) மாலை அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் ஒன்று இருசக்கர வாகனத்திற்கு வழி விட ஒதுங்கிய போது திடீரென பள்ளத்தில் சாய்ந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமுமின்றி உயிர்த்தப்பினர்.


