News April 1, 2025

விவசாயிகள் குறை தீர் கூட்டம். 3ஆம்  தேதி நடக்கிறது

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மை கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் 3ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

Similar News

News August 13, 2025

கால்நடை விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்!

image

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ். கீழ்வேளுர் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியங்களில் 50% மானியத்தில் ஏழை கால்நடை விவசாயிகளுக்கு சினையுற்ற கறவை பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கு கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவர் மூலமாகவும், மற்றும் துணை பதிவாளர் பால் உற்பத்தியாளர்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாமென மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

நாகை புத்தகத் திருவிழா; ரூ.1.30 கோடிக்கு புத்தக விற்பன!

image

நாகையில் 4ம் ஆண்டு புத்தக திருவிழா கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி ஆக.11ம் தேதி வரை நடைப்பெற்றது. இதில், 105 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு இலக்கியம், புதினம், வரலாறு என பல்வேறு வகையான புத்தகங்கள் பதிப்பாளர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இத்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று ரூ.1.30 கோடி மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

திருக்குவளை பால முனீஸ்வரர் கோயிலில் ஆடித் திருவிழா

image

நாகை மாவட்டம் திருக்குவளையில் பால முனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இகோயிலில் ஆடி பெருந்திருவிழா நேற்று இரவு (ஆக.12) நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்று, அன்னதான விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நகைச்சுவை பட்டி மன்றம் நடைப்பெற்றதில்,
ஏராளமான பக்தர்கள், மருளாலிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!