News April 1, 2025
ஜியோ ஹாட்ஸ்டார் இலவச ரீசார்ஜ்.. அவகாசம் நீட்டிப்பு

ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படுகிறது. இதை பார்க்கும் கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.299 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் ஓடிடியை 90 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்தலாம் என ஜியோ அறிவித்திருந்தது. தற்போது இந்த ரீசார்ஜ் அவகாசத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஜியோ நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News April 3, 2025
விண்வெளி பயணத்திற்கு ரெடியாகும் ‘சிங்கப் பெண்கள்’!

அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
News April 3, 2025
வக்ஃப் வாரிய மசோதா: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.
News April 3, 2025
புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.