News April 1, 2025
இந்த கொடூர கொலையே சாட்சி: ஸ்டாலினை விமர்சித்த இபிஎஸ்

தி.மலையில் போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில், போதைப்பொருட்கள் இளைஞர்களை எப்படி சீரழிக்கின்றன என்பதற்கு இதுவே சாட்சி என விமர்சித்த அவர், விளம்பர ஷூட்டிங்கில் வந்து ‘போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்’ என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. சற்றுமுன் புதிய அறிவிப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு நாளையும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுவரை 2 கோடியே 4 லட்சம் குடும்பத்திற்கு ₹3,000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்டவர்கள் நாளை பொங்கல் பரிசை வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், கைரேகை சரியாக பதியாவிட்டாலும், கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.
News January 13, 2026
மே 1-ம் தேதி காத்திருக்கும் ட்ரீட்!

அஜித்தின் கார் ரேஸிங் குறித்த ஆவணப்படம் தயாராகி வருவது தெரிந்த விஷயமே. இந்த ஆவணப்படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்களாம். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்திற்கு நிகராக இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், OTT மார்க்கெட்டில் படத்துக்கு கடும் கிராக்கி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News January 13, 2026
சூர்யா பட நடிகையை காதலிக்கும் சஹால்!

கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல், பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியை காதலிப்பதாக காஸிப் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை சாஹல் விவாகரத்து செய்தார். பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்தாலும், தனது அழகால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த திஷா பதானி, தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


