News April 1, 2025
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் பிராத்வெய்ட் ராஜினாமா செய்துள்ளார். வெஸ்ட் இண்டீசில் ஆஸி. அணி விரைவில் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் புதிய தலைமைக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் தலைமையில் ஆஸி.யில் 27 ஆண்டுகளுக்கு பிறகும், பாக்.கில் 37 ஆண்டுகளுக்கு பிறகும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்தது.
Similar News
News April 3, 2025
சொத்து விவரங்களை வெளியிட SC நீதிபதிகள் முடிவு

சொத்து விவரங்களை பொது வெளியில் வெளியிட சுப்ரீம் கோர்ட் (SC) நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அண்மையில் டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதனால் சர்ச்சை உருவான நிலையில், டெல்லியில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சொத்து விவரங்களை சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது.
News April 3, 2025
விண்வெளி பயணத்திற்கு ரெடியாகும் ‘சிங்கப் பெண்கள்’!

அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
News April 3, 2025
வக்ஃப் வாரிய மசோதா: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.