News April 1, 2025
பிளவுவாத அரசியல்: ஸ்டாலினை விமர்சித்த யோகி

மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்கும் நிலையில், TN CM ஸ்டாலின் மீது UP CM யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது வாக்கு வங்கிக்கு ஆபத்து இருப்பதால் மொழி அடிப்படையில் பிளவை ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சிப்பதாகவும், அவர் குறுகிய அரசியல் செய்வதாகவும் யோகி சாடியுள்ளார். இதுபோன்ற பிளவுவாத அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 3, 2025
விண்வெளி பயணத்திற்கு ரெடியாகும் ‘சிங்கப் பெண்கள்’!

அமெரிக்க பாடகி உட்பட 6 பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவுடன் ஏப். 14-ல் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. தொழிலதிபர் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், மனிதர்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை 10 முறை சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 11-வது முறையாக செல்லும் குழுவில் பெண்கள் மட்டுமே உள்ளனர். அமெரிக்க பாடகி கேட்டி பெர்ரி உள்ளிட்ட 6 பேருடன் ராக்கெட் ஏவப்பட உள்ளது.
News April 3, 2025
வக்ஃப் வாரிய மசோதா: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். பாஜக அரசின் பிளவுவாத அரசியல், இஸ்லாமிய சகோதரர்களை பாதுகாப்பற்ற நிலையிலும், அச்சத்திலும் உறைய வைத்திருக்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜனநாயக விழுமியங்களை மறுக்கும் பாஜக அரசை கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மசோதாவை திரும்ப பெறாவிட்டால் தவெக போராடும் எனவும் எச்சரித்துள்ளார்.
News April 3, 2025
புதிய அவதாரம் எடுக்கும் நித்தியானந்தா…!

கைலாசா நாடு இருப்பதையே பலரும் ஏற்கவில்லை. அதற்குள் நித்தியானந்தா உயிருடனேயே இல்லை என்ற செய்தியும் பரவியது. இதனால், அவர் நேரலையில் வந்து விளக்கம் அளித்தார். அப்போது, உலகின் முதல் ஆன்மிக AI செயலியை உருவாக்கும் பணியில் 2 வருடமாக ஈடுபட்டு வருவதால், நேரலையில் வருவதை குறைத்து கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை அறிந்து, ‘என் தலைவன் AI வரைக்கும் போயிட்டார்’ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.