News April 1, 2025
பர்ந்தூர் விமான நிலைய அனுமதி இந்த வாரம் வழங்கப்படும்

பரந்துார் விமான நிலைய இடத்தேர்வுக்கு, மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. தொடர்ந்து, திட்ட அனுமதிக்கு டிட்கோ விண்ணப்பம் செய்தது. இதை பரிசீலித்து வந்த மத்திய அரசு, இந்த வாரத்தில் அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து, விமான நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும். நிலம் தந்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு 8 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.13,000 முதல் ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, Diploma, M.Ed, M.Sc, MA, படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்.10-க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். மேலும், தகவலுக்கு <
News April 3, 2025
காஞ்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள்

காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 12 கோவில்கள் உள்ளன. அவை, குமரகோட்டம் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், காஞ்சி கைலாசநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், த்ரிலோக்யநாதர் கோயில், சத்யநாதேஸ்வரர் கோயில், சித்ரகுப்த சுவாமி கோயில், ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் கோவில், வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆகியன ஆகும். share to friens
News April 3, 2025
திருமணம் நடக்க இருந்த பெண் கொலை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூா் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (24). விக்னேஸ்வரிக்கு நாளை (ஏப்ரல் 4) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 2) கொளத்தூர் சுடுகாடு அருகே விக்னேஸ்வரியின் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி, விக்னேஸ்வரி தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீசார் விசாரித்து, தலையில் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிந்தது.