News April 1, 2025
CSK போட்டியில் செல்போன்கள் அபேஸ் .. 8 பேர் கைது

சென்னை சேப்பாக்கத்தில் நடத்த IPL போட்டியின் போது 36 செல்போன்களை திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். சேப்பாக்கத்தில் கடந்த மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியை காண வந்தவர்களிடம் இருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் உட்பட 8 பேரும், வேலூர் வழியாக தப்ப முயன்றபோது தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 19, 2026
வாட்ஸ்ஆப் Group admin தான் இதற்கு பொறுப்பு: ECI

பலரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் தேர்தல் பிரசாரங்களை கட்சிகள் முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், வாட்ஸ்ஆப் குழுக்களில் கட்சிகளின் செயல்பாட்டை கண்காணிக்க ECI மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்துள்ளது. தேர்தல் விதிகள் மீறப்படுவது தெரிந்தால், குழுவின் அட்மின் மீதே நடவடிக்கை பாயும் என்றும் ECI எச்சரித்துள்ளது. எனவே, Admin Only என்ற நிலைக்கு பல வாட்ஸ்ஆப் குரூப் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
FLASH: வேகமாக குறையும் தங்கம் விலை.. இன்ப அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் விலை தலைகீழாக குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) 165 டாலர்கள்(இந்திய மதிப்பில் ₹15,396) குறைந்து 4,725 டாலராகவும், வெள்ளி 1 அவுன்ஸ் 7 டாலர்கள் குறைந்து 71 டாலருக்கும் விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய <<19423249>>சந்தையில் காலை போலவே<<>>, மாலை நேர வர்த்தகத்திலும் தங்கம் விலை கணிசமாக குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 19, 2026
மீண்டும் அப்பா ஆனார் தினேஷ் கார்த்திக்!

தினேஷ் கார்த்திக் – தீபிகா பல்லிக்கல் தம்பதிக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளதை அவர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். பிறந்த பெண் குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கிரிக்கெட்டரான தினேஷ், ஸ்குவாஸ் பிளேயரான தீபிகாவை கடந்த 2015, ஆக.25-ல் திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு 2021-ல் கபிர் & ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர்.


