News April 1, 2025

நாடாளுமன்றத்தில் ‘எம்புரான்’ விவகாரம்.. எம்.பி.க்கள் அதிரடி

image

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்புரான் பட விவகாரம் குறித்து விவாதிக்க கோரி கேரள எம்.பி.கள் தீர்மானம் கொண்டு வந்தனர். மக்களவை செயலாளருக்கு எம்.பி. ஹிபி ஈடன் அளித்த நோட்டீஸில் குஜராத் கலவரம் குறித்து உண்மைகள் எம்புரான் படத்தில் இடம்பெற்றதால் சங்பரிவார் அமைப்புகள் அதனை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Similar News

News March 20, 2026

உறுதியாக ‘NO’ சொன்ன இபிஎஸ்

image

பாஜக, தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என இருதரப்பினரும் மறுத்தாலும், திரைமறைவில் பேச்சு நடந்ததாக கூறப்படுகிறது. திமுகவை எப்படியாவது வீழ்த்திட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டதாம். ஆனால், விஜய்க்கு கொஞ்சம் இடம்கொடுத்தாலும், நீண்டகால அடிப்படையில் அதிமுகவுக்கு பாதகமாகிவிடும் என்பதால் EPS அதை உறுதியாக மறுத்துவிட்டாராம். புதிதாக இன்னொருவரை ஏன் வளர்த்துவிட வேண்டும் ன அவர் நினைக்கிறாராம். உங்க கருத்து?

News March 20, 2026

WhatsApp-ல் வரும் புது அப்டேட்..

image

WhatsApp தனது யூஸர்களுக்கு தெளிவான Calling அனுபவத்தை தர புதிய Noise Cancellation வசதியை கொண்டுவரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. Advanced Audio Processing டெக்னாலஜி மூலம், நெரிசலான இடங்களில் இருந்து நீங்கள் பேசினாலும், உங்களின் குரல் மட்டும் மறுமுனையில் இருப்பவருக்கு கேட்குமாம். உங்கள் குரலை தவிர்த்து, வாகனங்களின் சத்தம், காற்றின் இரைச்சல், மற்றவர்கள் பேசும் சத்தம் போன்றவை தானாக நீக்கப்படுமாம்.

News March 20, 2026

திமுக ஒரு மனிதகுல விரோதி: சீமான்

image

தன் முதுகிலேயே ஸ்டாலின் ஒரு டெல்லியை (காங்.,) வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார் என சீமான் சாடியுள்ளார். பேட்டி ஒன்றில் பேசியுள்ள அவர், GST, NEET உள்ளிட்ட காங்., பிரசவித்த பிரச்னைகளுக்கு மோடி பூஸ்ட் கொடுத்து வளர்க்கிறார் என்று விமர்சித்துள்ளார். எனவே பாஜகவை விமர்சிப்பதற்காக காங்.,ஐ திமுக புனிதப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், காங்., தமிழின விரோதி என்றால் திமுக மனிதகுல விரோதி என குறிப்பிட்டார்.

error: Content is protected !!