News April 1, 2025
கரூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் ஏப்.3-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 4, 2025
திருமண மண்டபம் ஏலத்தில் விற்பனை அறிவிப்பு.

கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் மாஸ்டர் திருமண மண்டபமானது (674 சமீ) 22.04.25ம் தேதி பிற்பகல் 3மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.25,000/ DD சமர்ப்பிக்க வேண்டும்.ஏல நிபந்தனைகள் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) உள்ளது ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்
News April 4, 2025
திருமண தடை நீக்கும் புகழிமலை முருகன்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கோயிலாகும். இந்தக் கோயில் முன்னர் மைசூர் எல்லையாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. இங்கு, தொடர்ந்து 12 செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப்பூ மற்றும் செவ்வாழைப்பழம் முருகனுக்கு படைத்து வந்தால் திருமணத் தடை நீங்கி இல்லற வாழ்க்கைக்குச் செல்லலாம் என்பது நம்பிக்கை.
News April 4, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 10 காலிபணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. இந்த பணிகளுக்காக <