News April 1, 2025
கன்னியாகுமரி பெயர் காரணம் தெரியுமா ?

தென்முனையில் தனித்துவமான கன்னியாகுமரி மாவட்டத்தின் பெயருக்கு பின்னாலும் ஒரு சுவாரசியம் உள்ளது.கன்னி-குமரி என்றால் திருமணமாகாத பெண் என்று பொருள்.இங்குள்ள பகவதி அம்மன் சிவ பெருமானை திருமணம் செய்ய காத்திருந்தமையால் இப்பெயர் பெற்றது என கூறப்படுகிறது.ஆங்கிலேயர்கள் இந்த பகுதியை கேப் குமாரின் என்று அழைத்து வந்தனர்.கேப் என்றல் மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பகுதி,குமாரின் என்றால் குமரி என்று பொருள்.
Similar News
News April 19, 2025
உயிரிழந்த 22 மாணவ மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி

நீட் ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்ததாக திமுக அரசை கண்டித்தும், நீட் தேர்வால் இன்னுயிரை இழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு இன்று மாலை (19.4.2025) நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் அருகில் திமுக மாணவர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
News April 19, 2025
தஞ்சையில் இருந்து 1250 டன் ரேஷன் அரிசி வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக இன்று தஞ்சாவூரில் இருந்து 1,250 டன் ரேசன் அரிசி, சரக்கு ரயில் மூலம் நாகர்கோவில் ரயில் நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து லாரிகள் மூலம், அரிசி, பள்ளி விளையில் உள்ள மத்திய அரசின் உணவுபொருள் சேமிப்பு திட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டது.
News April 19, 2025
கண்டித்த சூப்பர்வைசரை பிளேடால் வெட்டிய ஊழியர்

எறும்புக்கோட்டையைச் சேர்ந்த அபுதாகிர்(42), வலை கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவரது கம்பெனியில் அமரேஷ்வர் சுவைன் வேலை பார்த்து வந்த நிலையில், அவர் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை அபுதாகிர் கண்டித்ததால், அபுதாகிரை, அமரேஷ்வர் பிளேடால் வெட்டி, கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.