News April 1, 2025
புதுச்சேரியில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி

புதுவையை சேர்ந்த சபரிநாதன் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று நம்பி ரூ2,35,000 முதலீடு செய்தார். ஆனால் அது ஒரு போலியான பங்குச்சந்தை ஆகும். இதேபோல் புதுவையை சேர்ந்த அனுபமா ஜெயஸ்ரீயிடம் ரூ.12,397,விக்ரமிடம் ரூ10000 ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். கவனமாக இருக்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
Similar News
News April 4, 2025
அக்னிவீர் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ராணுவத்தில் அக்னிவீா் பொதுப் பணி, தொழில்நுட்பம், எழுத்தா், ஸ்டோா் கீப்பா், தொழில்நுட்பம், டிரேட்ஸ்மேன் உள்ளிட்டப் பிரிவுகளுக்கு புதுச்சேரி மாவட்டம், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News April 4, 2025
புதுவை காவல் நிலையங்களில் நாளை மக்கள் மன்றம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்படி, டிஐஜி சத்திய சுந்தரம் மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News April 4, 2025
புதுவை சட்டத்துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி அரசில் குறைந்தபட்சம் அமைச்சக உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் இரண்டு கன்சல்டன்ட் பதவியை நிரப்ப உத்தேசித்துள்ளது. இந்த பதவிக்கு வரும் 12ஆம் தேதிக்குள் https://law.py.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என சட்டத்துறை சார்பு செயலர் தெரிவித்துள்ளார்.