News April 1, 2025
ஜடேஜாவின் வைரல் போஸ்ட்.. மீளுமா CSK

நடப்பு சீசனை CSK வெற்றியுடன் தொடங்கினாலும் அடுத்த 2 போட்டிகளிலும் தொடர் தோல்வி. முக்கியமாக தோனி 9வது வீரராக களமிறங்கியது பெரும் பேசுபொருளாக மாறியது. இதனிடையே தோனியுடன் களத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விரைவில் எல்லாம் மாறும் என ஜடேஜா பதிவிட்டுள்ளார். அணியின் முக்கிய தூண்களான தோனி, ஜடேஜா சோபிக்கத் தவறியதால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 15, 2026
விபத்தில் 6 பெண்கள் பலி.. பொங்கல் நாளில் சோகம்!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் கார் – லாரி மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 6 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 3 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகர சங்கராந்தி விழாவுக்கு(வட மாநிலங்களின் பொங்கல்) பதேபூருக்கு சென்றபோது விபத்து நிகழ்ந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன.
News January 15, 2026
ஜனநாயகத்தை வழி நடத்தும் பெண்கள்: PM மோடி

இந்தியாவின் முக்கியமான தூணாக பெண்கள் மாறிவிட்டதாக காமன்வெல்த் மாநாட்டில்(CSPOC) PM மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பது மட்டுமல்லாமல் அதை வழிநடத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டின் ஜனாதிபதியே ஒரு பெண் தான் என்றார். மேலும், அனைவரையும் உள்ளடக்கிய இந்த போக்கே இந்திய ஜனநாயகத்தில் பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் ஒரு கேக் வகை, பிளாக் ஃபாரஸ்ட். 20-ம் நூற்றாண்டில் ஜெர்மனியில் உருவான இந்த கேக்கிற்கு, ஏன் இந்த பெயர் தெரியுமா? தென்மேற்கு ஜெர்மனியில் உள்ள ‘பிளாக் ஃபாரஸ்ட்’ மலைப்பகுதியில் விளையும் செர்ரியில் இருந்து தயாரித்த ‘கிர்ஷ்வாசர்’ என்ற பிராந்தியை கொண்டே இந்த கேக் தயாரிக்கப்படுகிறது. இதனாலேயே இவை ‘பிளாக் ஃபாரஸ்ட் கேக்’ என அழைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடிக்குமா?


