News April 1, 2025
ரசாயனம் கலந்த தர்பூசணியா? ஒரு டிஷ்யூ பேப்பர் போதும்

ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
Similar News
News February 4, 2026
ராணிப்பேட்டையில் பேருந்தை சுத்துப்போட்ட மாணவர்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வதி கிராமத்தில் நேற்று (பிப்.3) காலை 8 மணி அளவில் சாலையில் பாணாவரத்திலிருந்து நெமிலி வரை செல்லும் அரசு பேருந்து கூட்ட நெரிசல் காரணமாக மாணவர்களை ஏற்றாமல் சென்றது. இதனால் பள்ளிக்கு நேரமானதால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
News February 4, 2026
அரக்கோணத்தில் போலீசார் அதிரடி!

அரக்கோணம் அருகே செங்கல்சூளையில் 4 குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் ரமேஷ் நேற்று (பிப்.3) நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். இதில் மின்னல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் பணிபுரித்த 14 மற்றும் 17 வயது சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 4, 2026
ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

முத்துக்கடையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று (பிப்.3) காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்றது. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்துவது என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


