News April 2, 2024
திருப்பத்தூரில் லேசான மழை

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
Similar News
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இந்த <
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயனடையலாம்

கட்டுமான தொழிலாளர்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் ESIC or EPFO திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
திருப்பத்தூரில் வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி வாணியம்பாடி, திருப்பத்தூரில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.