News April 1, 2025

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக டான்ஸ்!

image

லேடீஸ் ஹாஸ்டல் முன்பு நிர்வாணமாக நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் உள்ள தனியார் ஹாஸ்டலில் ஏராளமான இளம்பெண்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், ஹாஸ்டலுக்கு வெளியே நிர்வாணமாக ஆபாச சைகையுடன் இளைஞர் நடனமாடியுள்ளார். புகாரின் அடிப்படையில் அங்குச் சென்ற போலீசார், மதுபோதையிலிருந்த வினோத்(35) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். எதுக்கு இந்த வேண்டாத வேலை?

Similar News

News April 4, 2025

ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

image

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.

News April 4, 2025

கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்து 6 பேர் பலி

image

மகாராஷ்டிராவில் கிணற்றுக்குள் டிராக்டர் விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். நாந்தேட் பகுதியில் டிராக்டரில் 11 பேர் பயணம் செய்ததாகத் தெரிகிறது. எதிர்பாராத விதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்ததில், அதிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து ₹2 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார்.

News April 4, 2025

சோனியா காந்தியை சாடிய மக்களவை சபாநாயகர்

image

வக்ப் வாரிய மசோதா ஜனநாயகத்தை தகர்த்துவிட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் முறையான விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு பின்னரே மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் மூத்த தலைவர் ஒருவர் விதிமுறைகளை பின்பற்றிவில்லை என பேசுவது துரதிஷ்டவசமானது எனவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

error: Content is protected !!