News April 1, 2025
தங்கம் விலை சவரன் ₹68,000ஐ கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.1) சவரனுக்கு ₹480 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510க்கும், சவரன் புதிய உச்சமாக ₹68,080க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த சில நாள்களாக மாற்றமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ₹114க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News January 27, 2026
டாஸ்மாக் வசூல்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா!

குடியரசு தினம் என்பதால் நேற்று டாஸ்மாக் விடுமுறை ஆகும். இதனால் அதற்கு முந்தைய நாளில் (ஜன.25) மதுபான விற்பனை சூடுபிடித்துள்ளது. இதன்படி, அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ₹220 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டு ஜன.25 அன்று ₹200 கோடிக்கு மது விற்பனை ஆகியிருந்தது. முன்னதாக, பொங்கல் விடுமுறையில் ₹850 கோடிக்கு டாஸ்மாக் வருமானம் ஈட்டியிருந்தது.
News January 27, 2026
Jana Nayagan: அரசியல் ஆதாயம் தேட முயல்கிறாரா விஜய்?

‘ஜன நாயகன்’ விவகாரத்தில் CBFC-க்கு நெருக்கடி கொடுக்க KVN நிறுவனம் முயன்றதே பிரச்னைக்கு காரணம் என நடிகரும், CBFC Ex உறுப்பினருமான SV சேகர் தெரிவித்துள்ளார். <<18971849>>ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக<<>> பேசிய அவர், CBFC-ன் பரிந்துரைகளை உரிய காலத்திற்குள் செய்யாமல், கடைசி நேரத்தில் கோர்ட்டுக்கு சென்றது தவறு என்றார். மேலும், ஜன நாயகன் பட விவகாரத்தில் அரசியல் அனுதாபம் தேடவே விஜய் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.
News January 27, 2026
21 வயதில் மகளுக்கு ₹11 லட்சம் வேண்டுமா? இதோ SSY திட்டம்!

பெண் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா(SSY) என்ற திட்டத்தை வழங்குகிறது. மகள் பிறந்ததில் இருந்து மாதாமாதம் ₹2,000 முதலீடு செய்தால் அவருக்கு 21 வயதாகும் போது, 8.2% வட்டியுடன் கிட்டத்தட்ட ₹11 லட்சம் கிடைக்கும். மகளுக்கு 10 வயதாவதற்குள், இத்திட்டத்தில் சேரவேண்டும். வசதிக்கேற்ப ₹250- ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். SHARE IT.


