News April 1, 2025
திருவாரூரில் மாற்றுத் தேதிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.31) ரமலான் விடுமுறை என்பதால், இன்று குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வரும் ஏப்ரல்.07 ஆழித்தேர், ஏப்ரல்.14 தமிழ் புத்தாண்டு ஆகிய நாட்களில் விடுமுறை தினங்கள் வருவதால் ஏப்ரல்.01, 08 மற்றும்15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். பிறர் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
Similar News
News April 4, 2025
திருவாரூரில் இப்படி ஒரு இடமா?

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..
News April 4, 2025
திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு…

தமிழக காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மொத்தம் 1,299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு வரும் ஏப்.7-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் tnusrb.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று மே.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE NOW
News April 4, 2025
திருவாரூர்: லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜோதி. இவர் கோவிலில் எழுத்தராக பணிபுரியும் சசிகுமார் என்பவரின் பழைய சம்பள பாக்கியை விடுவிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சசிகுமார் புகார் அளிக்கவே மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் லஞ்ச பெற முயன்ற போது ஜோதியை போலீசார் கையும் களவுமாக நேற்று கைது செய்தனர். SHARE