News April 1, 2025

மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

image

வள்ளிமலை அருகே திருவப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 22). இவர் நேற்று இரவு திருவலத்திலிருந்து வீட்டுக்கு வள்ளிமலை-பொன்னை செல்லும் பிரதான சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 1, 2026

வேலூர்: தூக்கில் முடிந்த தொழிலாளியின் ஆயுள்!

image

வேலூர் துத்திப்பட்டு எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (41), கூலி தொழிலாளி. இவருக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் விஷ்ணு நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

வேலூர் தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!

News February 1, 2026

வேலூர் போலீசின் அதிரடி வேட்டை – 4 பேர் கைது!

image

பேரணாம்பட்டு பகுதியில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பேரணாம்பட்டு போலீசாருக்கு நேற்று (ஜனவரி.31) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு (ரகுராம் 44) அருண்குமார் (33), கலைஞர் (56), கோவிந்தராஜ் (40), ஆகிய 4 பேரும் வீடுகளில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இதையடுத்து 4 பேரையும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!