News April 1, 2025

மன வளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது

image

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மன வளர்ச்சி குன்றிய பெண்ணிற்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தயாரிடன் சைகையில் கூறி அழுதுள்ளார். அதன்பின் திருவிடைமருதூர் மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சன்னகுளம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News April 4, 2025

தஞ்சையில் இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு

image

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தும் TNPSC IV தேர்விற்கான கட்டணமில்லா இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருப்பனந்தாள், திருவோணம், கும்பகோணம் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு பதிவு செய்ய ஆன்லைன் இணைய முகவரி ஆட்சியர் வழங்கியுள்ளார். மேலும் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும்.

News April 4, 2025

பட்டுக்கோட்டையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரூப்-4 தேர்வு ஜூலையில் நடைபெற உள்ளது. இதனால் பட்டுக்கோட்டை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் பட்டுக்கோட்டை அறிவுசார் மையத்தில் வரும் 9ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். இதை போட்டி தேர்வுக்கு தயாராவோருக்கு SHARE செய்து பயன்பெற உதவுங்கள்…

News April 4, 2025

தஞ்சை மாவட்டத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் (Assistant Manager) பணிக்கான 100 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்..

error: Content is protected !!