News April 1, 2025
மீண்டும் இணையும் ‘சிறுத்தை’ காம்போ

நடிகர் கார்த்தி அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எமோஷனல் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ‘கைதி 2’ உள்ளிட்ட தனது அடுத்தடுத்த கமிட்மென்ட்களை முடித்துவிட்டே கார்த்தி இப்படத்தில் இணைய உள்ளாராம்.
Similar News
News April 3, 2025
5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை…!

மங்களநாத சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை (ஏப். 4) விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், காசி விசுவநாத சுவாமி கோயில் குடமுழுக்கு, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு ஏப். 7, 11-ல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நெல்லை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏப். 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
News April 3, 2025
‘ஹிட்’ படத்தில் ஹீரோவாகும் கார்த்தி…!

தெலுங்கில் ஹிட் 4-ஆம் பாகத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடிப்பில் சைலேஷ் கொலானுவின் போலீஸ் த்ரில்லர் படமான ‘ஹிட் 3’, மே 1-ம் தேதி வெளியாக உள்ளது. இதில், நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடுத்த பாகத்தில் அவரை கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு முன்னோட்டமாக இந்த கேமியோ இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 3, 2025
பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

வரும் 6ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை இபிஎஸ் சந்தித்துப் பேசவுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இபிஎஸ்ஸை தொடர்ந்து அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாஜக முன்னணி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், வரும் 6ஆம் தேதி புதிய பாம்பன் தூக்குப் பாலத்தை திறக்க வருகை தரும் PM மோடியை EPS சந்தித்துப் பேசவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஓபிஎஸ்ஸும் PM மோடியை சந்தித்துப் பேசுகிறார்.