News April 1, 2025
நவீன தமிழ் சினிமாவின் அடையாளங்கள்

இயக்குநர் பாலசந்தரின் படங்களில்தான் முதன்முதலில் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன. கிராமத்து மண்வாசனை, உறவுமுறைகளை திரையில் காட்டி பாரதிராஜா புரட்சி செய்தார். பாலுமகேந்திராவின் படங்கள் எளிமையும், நுண்ணுணர்வும் மிக்கதாய் இருக்கும். தமிழ் சினிமாவில் டெக்னாலஜிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் மணிரத்னம். இவரது படங்களில் காட்சியமைப்பு தனித்துவம் மிக்கதாய் இருக்கும்.
Similar News
News January 17, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

U19 WC-யில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்திருந்தனர். தொடர்ந்து வங்கதேசம் விளையாடிய போது 17.2 -வது ஓவரில் மழையால் ஆட்டம் தடைப்பட்டது. இதனால் 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை தழுவியது.
News January 17, 2026
இண்டிகோ நிறுவனத்திற்கு ₹22.20 கோடி அபராதம்!

கடந்த மாதம் சுமார் 2,500 விமானங்களை ரத்து செய்து ஏற்படுத்திய இடையூறுகளுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு மத்திய அரசு ₹22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்திய நிலையில், தற்போது அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கால அமைப்பு ரீதியான திருத்தங்களை உறுதி செய்வதற்காக, இண்டிகோ நிறுவனம் ₹50 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News January 17, 2026
IPL திருவிழாவுக்கு சின்னசாமி ஸ்டேடியம் ரெடி!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற IPL கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் அங்கு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு RCB-யின் IPL ஆட்டங்கள் புனேவில் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த KSCA வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச மற்றும் IPL போட்டிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும்.


