News April 1, 2025
தமிழின வெறுப்பை உமிழும் எம்புரான்: வேல்முருகன் காட்டம்

எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வன்மத்தை காட்டியிருப்பதாக வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடும்பள்ளி டேம் என்ற மாற்று பெயரில், இது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மலையாள சினிமாவில் தொடர்ந்து தமிழின வெறுப்பை உமிழும் கருத்துகள் இடம்பெறுவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவும், தமிழர்களை கொச்சைப்படுத்துவதை கைவிடவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News February 2, 2026
முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்

தவெகவின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதில், தவெக கொடியை விஜய் ஏற்றி வைத்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார். அப்போது 2026 தேர்தல் களப்பணி, அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தேர்தல் வாக்குறுதி குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (1/2)

*சென்னை – பெங்களூரு, சென்னை – ஹைதராபாத் உள்ளிட்ட 7 அதிவேக ரயில் தடங்கள் அமைப்பு *மகளிர் தொழில் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் வகையில், SHE மார்ட் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைப்பு *சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கு ₹10,000 கோடி நிதி ஒதுக்கீடு *புற்றுநோய் சிகிச்சைக்கான 17 மருந்து வகைகளுக்கான இறக்குமதிக்கு முழு வரி விலக்கு *நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி ₹12.2 லட்சம் கோடியாக உயர்வு
News February 2, 2026
மத்திய பட்ஜெட்டின் டாப் 10 சிறப்புகள்.. (2/2)

*தமிழகத்தில் அரியவகை கனிமங்களுக்கான வழித்தடம் *வெளிநாடு சுற்றுலா பேக்கேஜ்களுக்கு வரி 2% ஆக குறைப்பு * நாடு முழுவதும் மாவட்டம் தோறும் பெண்களுக்கான விடுதி *மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க 5 மருத்துவ முனையங்கள் அமைப்பு *இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047-ம் ஆண்டு வரை வரி விலக்கு


