News April 1, 2025
இந்தியாவில் கால் பதிக்கும் USA அணுசக்தி நிறுவனம்

USAவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனம், இந்தியாவில் அணு உலைகளை வடிவமைப்பதற்கு டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார். இதன்மூலம், இந்தியாவில் புதிய அணு உலைகள் நிறுவப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், டாடா மற்றும் L&T நிறுவனங்களுக்கு 300 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணு உலை தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளன. இதன்மூலம், இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி துறையில் தொழில்நுட்ப பரிமாற்றம் நடைபெற உள்ளது.
Similar News
News January 21, 2026
திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசு டாக்டர்கள்!

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் 2 நாட்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய படி ₹3,000 உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறனர். ஏற்கெனவே கடந்த 12-ம் தேதி முதல் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து 20,000 அரசு டாக்டர்கள் TN முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
News January 21, 2026
Assembly: மறைந்தவர்களுக்கு இரங்கல் வாசிப்பு

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2025-ல் உயிரிழந்த முன்னாள் MLA-க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் , MLA பொன்னுசாமி, மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
News January 21, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 வரை அதிகரித்து ஷாக் கொடுத்த நிலையில், இன்றும் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹350 அதிகரித்து ₹14,250-க்கும், சவரனுக்கு ₹2,800 உயர்ந்து ₹1,14,000-க்கும் விற்பனையாகிறது. இந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


