News April 1, 2025

ஏப்ரல் 01: வரலாற்றில் இன்று

image

*1935 – இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்டது. *1957 – இந்தியாவில் 1 நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. * இலங்கை இனக்கலவரம், 1958: கொழும்பு நகரில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் மீது தார் பூசப்பட்டன. *1976 – ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. *2004 – கூகிள் நிறுவனம் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது. *முட்டாள்கள் தினம்.

Similar News

News January 15, 2026

திருப்பத்தூர்: NCRT புத்தக ஆராய்ச்சி செய்தவருக்கு பாராட்டு

image

தமிழ் நாட்டில் இருந்து NCRT புத்தகம் தொடர்பான ஆய்வறிக்கை ஆராய்ச்சி பணிக்காக ஐந்து ஆசிரியர்கள் டெல்லி சென்றனர். இதில் திருப்பத்தூரை சேர்ந்த ஜவகர் ஒரு மாத ஆராட்சியை முடித்த்து நேற்று சொந்த ஊர் திரும்பினார். இவரது பணியை பாராட்டி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நேற்று வழக்கறிஞர் கபிலன் மற்றும் தேமுதிக மாவட்ட பொருளாளர் ஐ.ஆஞ்சி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

News January 15, 2026

BREAKING: பொங்கல் நாளில் பணம் அறிவித்தார் முதல்வர்

image

பொங்கல் திருநாளில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பருவமழை, டிட்வா புயலால் 1.39 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தும் வகையில், ₹111.96 கோடி ஒதுக்கீடு செய்து, 33%-க்கு மேல் பயிர் சேதம் ஏற்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஒரு ஹெக்டேருக்கு ₹20,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

News January 15, 2026

பொங்கல் ஸ்பெஷல்: ‘தலைவர் 173’ UPDATE!

image

பொங்கலை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, ‘தலைவர் 173’ படம் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் எனவும் அவர் கூறினார். ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படம் கமர்சியல் படமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம், கமல் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

error: Content is protected !!