News April 1, 2025

சீனா சென்று இந்தியாவை வம்பிழுத்த யூனுஸ்

image

சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ், அங்கு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் நிலங்களால் மூடப்பட்டுள்ளதாகவும், எனவே கடல் பரப்பு உள்ள வங்கதேசத்தில் முதலீடுகளை செய்து, சீனா பொருளாதார விரிவாக்கம் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார். அவரது இந்த பேச்சு இந்தியாவை வம்பிழுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Similar News

News January 27, 2026

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூ.612.58 கோடி வருவாய்

image

ரயில் பயணிகள் சேவை மூலம் நடப்பாண்டில் சேலம் கோட்டம் ரூ.612.58 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், இது முந்தைய ஆண்டின் இதே காலத்தைவிட 5.6 சதவீதம் அதிகமாகும். அதேநேரத்தில், சரக்கு வருவாய் ரூ.244.26 கோடியாக உள்ளது. இது 10.03 சதவீதம் அதிகமாகும். சிறப்பு ரயில்களின் இயக்கம் மூலம் ரூ.41.74 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றார்.

News January 27, 2026

பெண்களுக்கு CM ஸ்டாலின் கொடுத்த Promise

image

சென்னையில் மகளிர் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து, CM ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் இந்தியாவில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மரியாதையான ஊதியத்தை பெற்றிடவும், அச்சம் இல்லாமல் வாழவும் திமுக அரசு துணை நிற்கும் என்ற Promise-ஐ தான் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

News January 27, 2026

வெள்ளி விலை கிலோ ₹12,000 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (ஜன.27) சவரனுக்கு ₹520 குறைந்த நிலையில், வெள்ளி விலை அதற்கு நேர்மாறாக அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹12 உயர்ந்து ₹387-க்கும், 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹3.87 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் விலைக்கு இணையாக வெள்ளி விலையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!