News March 31, 2025
சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகரில் இன்று (31.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Similar News
News April 3, 2025
நாளை முதல் மீண்டும் மெமு ரயில்!

பிரக்யாராஜ் மகா கும்பமேளா நிறைவடைந்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 04) முதல் சேலம்- அரக்கோணம், அரக்கோணம்- சேலம் மெமு ரயில்கள் (16087/16088) இயக்கப்படும் என்றும், இந்த ரயில் சேவையைப் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களைத் தவிர்த்து 5 நாட்கள் மட்டும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
News April 3, 2025
மும்பை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரெயில்

மும்பை சி.எஸ்.எம்.டி.-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-01005) வருகிற 9-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, திருப்பத்தூர் வழியாக வியாழக்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு சேலம் வந்தடையும். மதியம் 1.15 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும் என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
சேலத்தில் விவசாயிகளுக்கு ரூ.1,042 கோடி பயிர்க்கடன்!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1.10 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 1,042 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,007 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கை விட கூடுதலாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.