News March 31, 2025
BREAKING: மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பில் கூட்டாளிகளுடன் இருந்த ரவுடியை பிடிக்க முயன்றபோது அவர் தாக்கியதால் என்கவுண்ட்டர் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுபாஷ் சந்திர போஸை போலீசார் தேடிவந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Similar News
News April 5, 2025
பெற்றோர்களே, இதை கவனிங்க!

பெற்றோர்களுக்கு இடையிலுள்ள உணர்வுபூர்வமான பிணைப்பு, குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய பெற்றோர் குழந்தைகளுக்காக நிறைய நேரம் செலவிடுகின்றனர். இதனால் கல்வியில் அவர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவதுடன், பெற்றோரை முன்மாதிரியாகவும் கொள்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமைகிறது.
News April 5, 2025
புதிய ₹500, ₹10 ரூபாய் நோட்டுகள்: RBI அறிவிப்பு

₹500 மற்றும் ₹10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும். ஆனால், புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். பழைய நோட்டுகளும் செல்லும். ₹100, ₹200 நோட்டுகளும் கூட விரைவில் மல்ஹோத்ரா கையெழுத்துடன் வெளியாக உள்ளன.
News April 5, 2025
வேலை போய்விடுமோ என்று பயந்தால்…

தினசரி பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தம் போதாதென்று வேலை போய்விடுமோ என்ற அச்சம் ஒருவரின் குணநலத்தை (ஆளுமையை) பெரிதும் பாதிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை போய்விடும் என்ற சூழ்நிலை நீண்டகால அளவில் ஒருவரின் மனச்சமநிலை பாதிக்கிறது, முரண்டுபிடிக்கும் மனநிலை ஏற்படுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உங்கள் அனுபவம் என்ன? இதை எப்படி சமாளிப்பது? கமென்ட்டில் சொல்லுங்கள்