News March 31, 2025

மதுரை : மேயர் தலைமையில் நாளை குறைதீர் கூட்டம்

image

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் வாரந்தோறும் மண்டல கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் மண்டலம் இரண்டில் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நாளை(ஏப்ரல்.01) காலை 10:30 மணிக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமையில் குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 19, 2026

BREAKING மதுரைக்கு மஞ்சள் அலர்ட்…!

image

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வருகிற (பிப்.22) மதுரை மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

News February 19, 2026

மதுரை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

மதுரை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு<> Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 19, 2026

தேர்தல்: மதுரையில் 84 எஸ்.ஐ., க்கள் இடமாற்றம்

image

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு மதுரை நகரில் நீண்ட நாள் பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதில் நேற்று 24 பெண்கள் உட்பட 84 எஸ்.ஐ.,க்கள் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டதாக மாநகர் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!