News March 31, 2025
IPL: கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்…!

புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட காத்திருக்கின்றன. KKR அணி ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், MI அணி இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்கவில்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 34 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், MI 23 முறையும் KKR 11 முறையும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பாங்க?
Similar News
News January 17, 2026
IPL திருவிழாவுக்கு சின்னசாமி ஸ்டேடியம் ரெடி!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற IPL கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த பெருந்துயரத்தால் அங்கு போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தாண்டு RCB-யின் IPL ஆட்டங்கள் புனேவில் நடத்தப்படும் என கூறப்பட்டது. இதனிடையே சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த KSCA வைத்த கோரிக்கையை ஏற்று, அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் சர்வதேச மற்றும் IPL போட்டிகள் அங்கு தொடர்ந்து நடைபெறும்.
News January 17, 2026
தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டியவை

தைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உணவு கட்டுப்பாடு மிகவும் முக்கியம். குறிப்பாக சில உணவுகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அவை என்னென்ன உணவுகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உணவு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News January 17, 2026
சற்றுமுன்: கூட்டணி முடிவை அறிவித்தார்

கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேச வேண்டாம் என கட்சியினருக்கு காங்., தலைமை அறிவுறுத்தியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். டெல்லியில்<<18883890>> உயர்நிலைக் கூட்டத்தில்<<>> பங்கேற்றபின் பேசிய அவர், MP, MLA-க்களின் கருத்துகளை தலைமை கேட்டுக் கொண்டது என்றார். அதன் அடிப்படையில், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு TN காங்கிரஸ் கமிட்டி கட்டுப்படும் எனவும் அவர் கூறினார்.


