News March 31, 2025

பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

image

இன்று (மார்ச்.31)பேராவூரணியில் ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதனை யாம் வெளியீட்டகமும் ஆயர் சமூக அறக்கட்டளையும் இணைந்து நடத்தியது. இந்நிகழ்வின் சிறப்புபயிற்சியாளராக சிவா அய்யணன்,பெரி,கபிலன் பிரகாஷ் ,பாஸ்கர்,முத்துக்குமார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் .நீலகண்டன், சாரதி ,காளிதாஸ், மணிகண்டன் மற்றும் பயனாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

Similar News

News February 3, 2026

பாபநாசத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. திடீர் திருப்பம்

image

திருப்பாலைத்துறை அவுல்கார தெரு சந்து பகுதியில் கடந்த வாரம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தீயில் கருகிய நிலையில் உயிரிழந்து இடந்தார். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தவர் திருப்பாலைத்துறை வெள்ளை பிள்ளையார் தெருவை சேர்ந்த முகமது அலி என்பதும், உடல்நலக்குறைவால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

News February 3, 2026

தஞ்சை வந்தடைந்த 1,300 டன் பொட்டாஷ் உரம்

image

தஞ்சை மாவட்டத்தில் முப்போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்காக, தூத்துக்குடியில் இருந்து 1300 டன் பொட்டாஷ் உரம் நேற்று ரயிலில் தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இந்த உரங்கள் தனியார், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன. டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பணிகளுக்காக இந்த உரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

News February 3, 2026

தஞ்சை: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

image

தஞ்சை மக்களே! இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் தஞ்சை மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!