News March 31, 2025
கால்ஷீட் தரவில்லை… தனுஷ் மீது பரபரப்பு புகார்

தனுஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணம் பெற்றுக் கொண்டு தற்போதுவரை கால்ஷீட் தரவில்லை என ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் புகாரளித்துள்ளது. இதுகுறித்து ஆர்.கே.செல்வமணிக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் 2024 அக்டோபர் 30-ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என ஏற்கனவே கூறியது என்னானது என கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் குறுக்கீட்டால் நியாயம் கிடைக்கவில்லை என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2025
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.3) முதல் வரும் 5-ஆம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
News April 3, 2025
WARNING: இங்கெல்லாம் நிலநடுக்கம் ஏற்படும்

வருங்காலத்தில் இந்தியாவின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். குஜராத், ஹிமாச்சல், J&K பகுதிகளில் ரிக்டர் அளவு 9 என்ற வகையில் நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறுகின்றனர். டெல்லி, ஹரியானா, மகாராஷ்டிராவில் ரிக்டர் அளவு 8, ராஜஸ்தானில் ரிக்டர் அளவு 7 மற்றும் கர்நாடகா, தெலங்கானா, ஒடிஷா, ஆந்திரா, ம.பியில் 7க்கும் குறைவான ரிக்டர் அளவில் பதிவாகும் எனவும் கணித்துள்ளனர்.
News April 3, 2025
டிரம்ப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடி லாஸ்?

இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 26% வரியை டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி விதிப்பு வேளாண், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, இந்த கூடுதல் வரிவிதிப்பால் இந்தியாவிற்கு ₹26,000 கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என அவர்கள் கணித்துள்ளனர். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.1% ஆகும்.